திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (63) . வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயலட்சுமி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றவர் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்படு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 25 பவுன் நகை ரூ 5ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பாத்திரங்கள் களவு போய் இருப்பது தெரியவந்தது.இது சம்பந்தமாக ஜெயலட்சுமி உடனடியாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டுத. அது சிறிது தூரம் ஓடியது.
.