Skip to content

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…. கஞ்சா விற்ற பெண் கைது… திருச்சி க்ரைம்….

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…  

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது 47). இவர் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சக ஊழியருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் இருந்து அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் லதாவின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் செயினை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து லதா எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகில் பொன்மலை மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் செல்போனை திருடியதாக சிவகங்கை மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனைவி லட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி 

திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி சந்திப்பு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியமங்கலம் கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி பாலாம்பிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
[14:35, 15/4/2025] Senthilvel Sir: திருச்சி ராம்ஜி நகரில்

கஞ்சா விற்ற பெண் கைது – 2 கிலோ பறிமுதல்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று ராம்ஜிநகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பகுதியில் வீட்டின் முன்பு கஞ்சா விற்பனை செய்த கற்பகம் ( 25) என்ற பெண் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி (67) என்ற மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்தனர் .

வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

திருச்சி பாலக்கரை பீமநகர் கீழத்தெரு பகுதி சேர்ந்தவர் குணசுந்தர் ( 40 ) இவர் பீமநகர் ஒண்டிக்கருப்பு கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வந்து தன்னுடைய மனைவியை ஏன் கிண்டல் செய்தாய் என குணசுந்தரிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவர் இடையே தகராறு ஏற்பட்டதில்,சதீஷ்குமார் குணசுந்தரை கத்தியால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது அவரை திருச்சி அரசு மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன்(39) மற்றும் பாலக்கரை பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (39)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!