Skip to content

மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்….. ஆசிரியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை

  • by Authour

திண்டுக்கல் முருகபவனம் அடுத்துள்ள நாயனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா ராணி ஜம்புலியம்பட்டியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இவர்கள் தங்களது மகளுக்காக வீட்டில் 100 பவுன் நகை வாங்கி பீரோவில் வைத்துள்ளனர். மகளின் திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக திருச்சிக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுள்ளனர்.

திருமணத்திற்கு துணி எடுத்து முடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை  கண்டு சவுரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் நகையும் ரூ.20 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இவர்கள் வீட்டின் அருகே உள்ள வீட்டில் சிசிடிவி கேமரா வைத்துள்ளனர். அந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வீட்டின் உள்ளே செல்வது தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!