கிருஷ்ணகிரியில் பிரபல நகைக் கடை உரிமையாளர் சுரேஷ். இவர் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.
கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.15 மணியளவில் தனது கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி நகர போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.