Skip to content
Home » திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது
ஒரு கட்டைப் பை வைத்திருந்தார். அதற்குள் ஒரு சிறிய பையில் ஒன்றரைப் பவுன் தாலி செயினை போட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் நைசாக அவரது பைக்குள் கையை விட்டு நகை இருந்த சிறிய பையை திருடி உள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காமாட்சி கூச்சலிட்டர். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்தப் பெண்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் சோமரசம்பேட்டை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொய்யா பாளையம் நரி குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த கோபால் மனைவி சரண்யா( 38 )தென்காசி மத்தளம் பாறை சல்மான் நகர் இசக்கி முத்து மனைவி வள்ளி ( 24 ) என்பது தெரியவந்தது. பயணிகள் போர்வையில் பெண்ணிடம் நகை திருடிய 2 பெண்கள் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!