Skip to content

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு…

திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, உள்ளே சென்று பார்த்தபோது உள்ளிருந்த இரண்டு அடி உயர செம்பு சாமி சிலை, இரண்டு குத்து விளக்கு, ஒரு தங்கமூலம் பூசிய தட்டு, இரண்டு தங்க காசுகள் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

 

டாஸ்மாக் கடை அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவு..

திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது38) இவர் தனியார் நிறுவனத்தில் கடன் வசூலிப்பாளராக வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது, அதனால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் திருச்சி ஏர்போர்ட் தென்றல் நகரில் உள்ள டாஸ்மாக்கிற்கு மது அருந்த சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை இதனால் அவரது மனைவி சரண்யா அங்கு சென்று பார்த்த போது, கண்ணன் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, நத்தர்ஷா பள்ளிவாசல், கனகப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் சையது பாசலூர் ரகுமான். இவரது மனைவி சாகின்பானு 35. இந்த தம்பதியரின் மகன் சையது இஸ்மாயில் (12)இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டு பாடத்தை முடிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து பெற்றோர் அவனை கண்டித்தனர். இதில் மனம் உடைந்த சிறுவன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு ப்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேர் கைது..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி புள்ளிக்கோட்டை, கீழத் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 55. இவர் சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அவரிடம்இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, அம்மா பட்டினத்தை சேர்ந்தவர் அகமது தம்பி (55) இவர் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இவரும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜமாணிக்கம் மற்றும் அகமது தம்பி ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவர் கைது..

திருச்சி ஸ்ரீரங்கம் மூலதொப்பு மலையப்பன் நகர் அருகே சட்ட சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் பின்னர்ஸ்ரீரங்கம் மூலதொப்பு பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் 38 என்பவரை கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 6500, 10 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வியாபாரியை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது….

திருச்சி குழுமணி சாலை எகிற மங்கலம் கீழ தெருவை சேர்ந்தவர் கணேசன் (45 ). இவர் உறையூர் சோழம் பாறை அருகே இளநீர் கடை வைத்துள்ளார். தன தனது கடை அருகே நடந்து சென்ற இவரை வழிமறித்து மூன்று வாலிபர்கள்பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துதிருச்சி ஸ்ரீனிவாச நகர் 11-வது கிராசை சேர்ந்த செந்தில்குமார் 27, செல்வ வீரபாண்டி 21 மற்றும் சேதுபதி 28 ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!