கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி டி.எம். ஹெச். நகர் பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி ஹஜிதா ஜமீன்(30). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் தர்காவிற்கு சென்றுள்ளார். மீண்டும் காலை ஆறு மணி அளவில் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட்,தோடு, ஆகிய தங்க நகைகளும் ஒரு செல்போன், ஒரு லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் களவு போயிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் களவாடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 1, 22,000 என மதிப்பீடு செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,களவாடிய மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .