உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். அதில் புனித வெள்ளி என்பது முக்கியமான நாள். அந்த புனிதவெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புனிதவெள்ளியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம். அந்த தியாகம் நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் மூலம் பலம் பெறுவோம் ‘என பதிவிட்டுள்ளார்.