கரூர் அடுத்த மணவாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமியர்களுக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது.
8, 10, 14, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடைபெற்ற செஸ் போட்டியில், கரூர் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 50க்கும் மேற்பட்ட செஸ் ஆர்பிட்டர்கள் கண்காணிப்பில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பிடம் பெறும் நபர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.