ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள், விசேஷ நாட்கள், சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினந்தோறும் பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ரெங்கநாதரை தரிசித்து செல்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெரங்கநாதர் சுவாமி கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளம் வழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. வழி நெடுங்கிலும் பக்தர்கள் நின்று வணங்கி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து உற்சவருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது.
மூலவர் நம்பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு சாற்றப்படுவதால் 48 நாட்களுக்கு திருவடி சேவை கிடையாது