தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து, ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கிராமப்புறங்களில் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலைதூர மருத்துவ சேவையை (Tele Consultation) செயல்படுத்தியதில் பெரிய மாநிலங்களில் (Larger States) இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட கேடயம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி. செந்தில் குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து இயக்குநர், மரு.டி.எஸ். செல்வவிநாயகம், தேசிய நலவாழ்வு குழும கூடுதல் இயக்குநர் டாக்டர் ஜெரால்டு ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL) ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தனி ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்
துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சென்னையிலுள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்தின் துணைத் தலைவர் திருமதி மிக்கேலா குச்லர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். ஸ்வர்ணா, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் உல்ஃப் முத், முதுநிலை நகர்ப்புற துறை நிபுணர் கிரண் அவதானுலா, நகர்ப்புற துறை நிபுணர் அர்ச்சனா ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.