Skip to content

ஜெயங்கொண்டம் அருகே சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி… 3 பேருக்கு சிகிச்சை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45), அன்பரசி (38) தம்பதியர்களுக்கு துவாரகா (15) இலக்கியா (12) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் முதல் நாள் வைத்த சிக்கன் உணவை மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு ஒவ்வாமை காரணமாக சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *