சென்னையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். திமுக பி்ரமுகரான இவர் போதை பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜெகபர் சாதிக்கை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜெகபர் சாதிக் வீட்டுக்கு மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.