ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
பாஜக தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறார். ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது விசாரணை அமைப்பது என அதிகாரிகளுக்கு அதிக அளவில் மன உளைச்சலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி கொடுத்து வருகிறது.
ஆனால், ஆந்திர மக்கள் தெளிவாக உள்ளனர். தங்களுக்காக பாடுபட்டவர்கள் யார், நல்லது செய்தவர்கள் யார் என அவர்கள் அறிந்து உள்ளனர். அதனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் அனைவரும் மக்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெறுவார்கள்” என்றார்.