ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக மக்கள் அளித்த புகார் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.