கரூர் மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் வானமேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகள் மீது மோதி சாலையோரம் நின்று கொண்டிருந்த முட்டை வாகனத்தில் மோதி ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கர்நாடகா மாநிலத்தை சார்ந்த 7 மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர், அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்தில் வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த வேனை மீட்பு வாகன மூலம் மீட்டனர். பின்னர் கவிழ்ந்த ஜிப்பை காவல்துறையினர் மீட்டு வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஐயப்ப பக்தர்களின் ஜீப் முட்டை வாகனத்தில் மீது மோதும் போது சாலையோரம் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.