திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி
தலைமை தாங்கி ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர், பேரவை மாவட்ட செயலாளர் ஐயம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், பாசறை சோனா விவேக், மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தேவா,புங்கனூர் கார்த்திக்,
ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் எஸ். பி முத்து கருப்பன், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ் டைமன் திருப்பதி,பகுதி விவசாய அணி செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
