முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக கொடி ஏற்றி, அன்னதானம், நடத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் டி.ஆர்.சுரேஷ்குமார்,
,புத்தூர் சதீஷ்குமார்,காமராஜ் இளைஞரணி தலைவர் அம்மன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான சீனிவாசன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி, அன்னதானம் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி செயலாளரும், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவருமான கோ.கு.அம்பிகாபதி,தொழிற்சங்கம் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அப்பாஸ், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட்,
பகுதி செயலாளர்கள் கலீல் ரகுமான், ரோஜர் ,என். எஸ்.பூபதி, அன்பழகன்,நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன்,வாசுதேவன் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார்,
பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், சிங்கமுத்து,பாலக்கரை பகுதி மாணவரணி செயலாளர் மார்க்கெட் பிரகாஷ்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ் குமார்,டைமண்ட் தாமோதரன்,கே.பி ராமநாதன் கேடிஏ. ஆனந்தராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கீரைக்கடைபஜாரில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அதிமுக கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து மன்னார்புரம் விழி இழந்தோர் பள்ளியில் ஐ.டி. பிரிவு சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
