முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவினர் அங்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிசாவன், கே.பி. முனுசாமி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ெஜயக்குமாா், வளர்மதி, கோகுல இந்திரா, தம்பிதுரை, அமைப்பு செயலாளர் திருச்சி ரத்தினவேல், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியும் ஏற்றனர். எடப்பாடி உறுதிமொழியை படிக்க மற்றவர்கள் அதை திருப்பி கூறி உறுதி ஏற்றுக்கொண்டனர். அதில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம் என அவர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.