Skip to content
Home » ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்கான பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

அம்மா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்.  அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க கூடிய அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி.என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *