தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. எனவே ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் முன் ஜெயலலிதா இறந்து விட்டார்.
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவரது நகை, பொருட்கள் உள்ளிட்ட உடமைகள் தற்போது பெங்களூரு கோர்ட் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த உடமைகளை தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு கோர்ட் இன்று உத்தரவிட்டது.
எனவே விரைவில் ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஒழீப்புத்துறை போலீசில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.