நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து இன்று அதிகாரிகளிடம் தென்மண்டல ஐ.ஜி கண்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது.. ஜெயக்குமார் வாயில் இரும்பு பிரஷ் வைக்கப்பட்டிருந்தது. அவரது வயிற்றில் 15 * 50 செ.மீ கடப்பா கல் கட்டப்பட்டு இருந்தது. முதுகு பகுதிகள் எரியவில்லை என இடைநிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொலையா, தற்கொலையா என எதுவும் சொல்லவில்லை. ஜெயக்குமார் கொலை என இதுவரை முடிவு செய்யவில்லை. அவரது உடல் அருகே டார்ச்லைட் கண்டெடுத்துள்ளோம். சந்தேக மரணம் என்ற ரீதியில் தான் விசாரித்து வருகிறோம்; விரைவில் முடிவு கிடைக்கும். ஜெயக்குமாரின் கடிதம் குறித்து அறிவியல்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் கடிதத்தில் இருந்த கையெழுத்து அவருடையதுதான் என உறவினர்கள் கூறியுள்ளனர். அதில் மிகைப்படுத்தப்பட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவாக 10 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும். இவ்வாறு ஐஜி கண்ணன் கூறினார். ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் சபாநாயகர் அப்பாவுவை தொடர்புபடுத்தி தகவல்கள் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஜி தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/02/அப்பாவு-min-930x620.jpg)