உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: இது வரலாற்று சிறப்பு மிக்க மகிழ்ச்சியான தீர்ப்புஓபிஎஸ் குழு ஒரு அட்டகத்தி. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம். கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வி அடைந்து விட்டது.இறுதி வெற்றி பாண்டவர்களுக்கே என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.