Skip to content

ஜார்க்கண்ட் கவர்னர் – ரஜினி சந்திப்பு….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.  ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில்  உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு சென்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன, அத்துடன் மகா அவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணி நேரம் ரஜினிகாந்த் மலை ஏறிய போட்டோக்களும் வெளியாகின.

tn

இந்நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். அத்துடன் அவரது குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!