ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ கடலோர பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.