தமிழக இளைஞர்கள் அகிம்சை, சத்யாகிரக வழியில் நின்று ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பெற்றனர். அதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தை பிறந்து விட்டாலே ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே சிறப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே தினத்தை பசு அரவணபை்பு தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் திருச்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த 6ம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 14ம் தேதி பசு அரவணைப்பு தினமாக(Cow Hug Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதே போல் ஜனவரி 16 -ம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக (Bull Hug Day) கொண்டாட வேண்டி இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.