திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திருச்சி, தேசிய கல்லூரி மைதானத்தில் (10/12/2022, 11/12/202) நடைபெற்றது.
திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, பிஷப் ஹீபர், தஞ்சை மண்டலத்திலிருந்து தஞ்சை, அன்னை வைளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல், அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் விளையாடின. ஜமால் முகமது கல்லூரி, தஞ்சை, அன்னை வைளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 3 – 1 என்ற கோல் கணக்கிலும், அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியை 8 – 0 என்ற கோல் கணக்கிலும் இரண்டு போட்டகளில் வென்றும், பிஷப் ஹீபர் கல்லூரியுடன் 0 – 0 என்ற கோல் கணக்கிலும் ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்தது.
பிஷப் ஹீபர் கல்லூரி, அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியை 4 – 1 என்ற கோல் கணக்கிலும், தஞ்சை, அன்னை வைளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2 – 0 என்ற கோல் கணக்கிலும், இரண்டு போட்டிகளில் வெனறும், ஜமால் முகமது கல்லூரியுடன்
0 – 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ஜமால் முகமது மற்றும் பிஷப் ஹீபர் இரு கல்லூரி அணிகளும் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்ததால் கோல்கள் விகித அடிப்படையில் (எடுத்தது மற்றும் பெற்றது) ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. பிஷப் ஹீபர் கல்லூரி இரண்டாவது இடம் பிடித்தது.
தஞ்சை, அன்னை வைளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியை 3 – 0 என்ற கோல் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த வீரர்களை கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஏ .கே .காஜா நஜீமுதீன், பொருளாளர் எம். ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் செயலர் கே. அப்துஸ் சமது, கௌரவ உறுப்பினர் முனைவர் கே.என். அப்துல்காதர் நிஹால் முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வர் ஏ. இப்ராஹிம் ஆகியோர் பாராட்டினார்கள்.