Skip to content
Home » 19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த  பாலு , காமராஜ், ராமசாமி, மருதைராஜ், தனபால் ஆகியோர் திருச்சி கலெக்டரிடம் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூத்தைப்பார் கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாய மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் தாழ்த்தப்ட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள். நாங்கள் வசிக்கும் வடக்கு மாரியம்மன் தெருவில் சுமார் 300 பேர் வசித்து வகுகின்றோம். ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரியுள்ள மனுதாரர் முகலைச்செல்வனு இதே தெருவில்தான் வசித்து வருகிறார்.

ஆண்டுதோறும் கூத்தைப்பார் பொது மந்தையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்ட விழா கமிட்டியால் – ஜல்லிக்கட்டுவிழா மிக சிறப்பாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டும் 22-01-2023 அன்று கூத்தைப்பார் பொது மந்தையில் ஜல்லிக்கட்டுவிழா மிக சிறப்பாகவும் எவ்வித பிரச்சினையும் இன்றி அமைதியாக நடத்தபட்டது. இந்த ஆண்டு விழாக்கமிட்டியில் எங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் சார்பில் நாங்கள் பங்குபெற்று இருந்தோம்

. எங்கள் தெருவில் மாரியம்மன் கோவிலும், அக்காண்டி அம்மன் கோவிலும் அருகருகே உள்ளது. மேற்படி நபர் அக்காண்டிஅம்மன் கோவிலுக்கு தன்னை அறங்காவராக முன்னிறுத்திக்கொண்டு அக்காண்டியம்மன் கோவில் இடத்தில் மாரியம்மன் கோயில் இருப்பதாகக கூறி கோவிலை எவரும் வழிபடவிடாமல் பூட்டிவைத்துவிட்டார். பின்னர்

அதிகாரிகளிடம் முறையீடு செய்து கோவிலைத் திறக்கச்செய்து வழிபாடு செய்து வருகிறோம். கோவில் பிரச்சினையால் அவரும் அவரது குடும்பத்தினகும் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்திட உரிமைகோரி சில ஆண்டுகளாக  அதிகாரிகளிடம் புகார் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்திட எந்த தனிநபருக்கும் தனி அமைப்பிற்கும் எவ்வித உரிமையும் இல்லை.

இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து 22-01-2023 அன்று கூத்தைப்பார். போது மந்தையில் ஜல்லிகட்டு விழா அமைதியாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பொது அமைதியை குலைக்கும் வண்ணமும், சமுதாய பிரச்சினையைஉருவாக்கும் விதமாகவும் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு விழா நடத்திட தற்போது தீய நோக்கத்தோடு சுயலபத்திற்காக கலைச்செல்வன் என்பவர் 19-02-2023 அன்று ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கோரியுள்ளார்.  அவரது  தீய நோக்கத்தை தடுக்கா விட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

தங்கள் அருள்கூர்ந்து தனிநபரான கலைச்செல்வன் என்பவர் ஐல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கக்கூடாது என்று பணிவுடன் வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *