திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. இதில் காளை முட்டியதில், மணப்பாறை ஆண்டவர் கோவில் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் முருகன்(54) பலத்த காயமடைந்தார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Tags:ஜல்லிக்கட்டு போட்டி