Skip to content
Home » திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

  • by Authour

திருச்சி தெற்கு  காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் (மாநகராட்சி 39 வது வார்டு) இன்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த விழாவிற்கு லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் தலைமை வகித்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் வகித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750 காளைகளும் 350  வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் முதல்காளையாக அழகுமுத்துமாரியம்மன் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சைக்கிள், சோபா செட். டிரஸ்சிங் டேபிள், உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்படுகிறது. பெரும்பாலான காளகைள் மைதானத்தில் நின்று  கெத்து காட்டி வீரர்களை தூக்கி வீசி  பொதுமக்களின் பாராட்டை பெற்றது.காட்

கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் கால்நடை உதவி இயக்குனர் மகேஷ் மற்றும் குழுவினர் காளைகள்  ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதி உடையதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

மருத்துவ அலுவலர்கள் வாக்ருதீன், விஜய் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை  செய்யப்பட்டனர்.  காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள்  ஆர்டிஒ வைத்தியநாதன் தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 180போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என குற்சாட்டு எழுந்து உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பேரி காடுகள் 80 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் ஆனால் இங்கு 20 மீட்டர் தூரம் மட்டுமே பேரிகாடு அமைக்கப்பட்டு உள்ளது அதுவும் சரியாக கட்டப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் வீரர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்தவர்களுக்கு  சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் போதிய இட வசதி இல்லை என கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விழாவில் உள்ளூர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதிக்காமல் வெளியூர் மற்றும் வெளிமாவட்ட ஜல்லிக்கட்டு காலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *