தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதன் முறையாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திமுக ஏற்பாடு செய்து வருகிறது. மெரினா புரட்சியை நினைவுபடுத்தும் விதமாக வரும் மார்ச் 5ம் தேதி கரசங்கால் என்ற இடத்தில்,முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட திமுக மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. இதில் சிறந்த காளைக்கு கார், சிறந்த மாடு பிடி வீரருக்கு பைக் பரிசு வழங்கப்பட உள்ளது.