தமிழகத்தில் தைப்பொங்கல் முதல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
இந்நிலையில் முதன்முறையாக இந்தாண்டு சென்னை மெரினாவில் மநீம சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று, அதன் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் அறிவித்திருந்தார். இதனிடையே சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திமுக ஏற்பாடு செய்து வருகிறது. வரும் மார்ச் 5ம் தேதி கரசங்கால் என்ற இடத்தில்,முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட திமுக மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது.