ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய கால்நடை நலவாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு தலைவர் மற்றும் கண்காணிப்பு அதிகாரி மிட்டல், எஸ்.பி. சியாமளாதேவி(பொ), மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, கால்நடை நல வாரிய உறுப்பினர் அயூப்கான் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை , கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.