ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது. கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.