திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து டிவி சீரியல் நடிகை கம்பம் மீனா ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளில் திமுக நிர்வாகிகள் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லக்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து கல்லக்குடி பேரூர் கழக செயலாளர் பால்துரை தலைமையில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கல்லக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.