அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரது காளையும் கலந்து கொண்டது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படுவதற்கு முன்பாக மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது எனினும் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட அக்காளை யாரிடமும் சிக்காமல் சிறிதுரம் ஓடிய நிலையில் மூச்சு இரைப்பு வாங்கி திடீரென கீழே விழுந்து உயிரிழந்தது இச்சம்பவம் ஜல்லிக்கட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
