Skip to content

புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அருகே இருந்திரபட்டி  என்ற  கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடந்து வருகிறது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்  டாக்டர் விஜயபாஸ்கரின் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.  விஜயபாஸ்கரும் போட்டியை காண வந்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்தில்  வீரர்களுக்கு போக்கு காட்டிய  ஒரு காளை,    திரும்பி செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை  போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை  முட்டித்தள்ளியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த  முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மைதானத்திற்கு வந்து  இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனுக்கு  முதலுதவி சிகிச்சை அளித்தார்.  உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற மேல் சிகிச்சை பெறும்படி கூறி அனுப்பி வைத்தார்.

 

error: Content is protected !!