திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 800 காளைகள் பங்கேற்று உள்ளன. 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில் அமைச்சர் மகேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் இதில் பங்கேற்றது. இதற்காக விஜயபாஸ்கரும் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தார். அவரது காளையான கொம்பன் வெற்றி பெற்றது.
இதற்காக அமைச்சருக்கு பரிசு டோக்கனை வழங்கினார். அதைத்தொடர்ந்து சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் மைதானம் அமைப்பதற்கான ஆணையை ஜல்லிக்கட்டு குழுவினரிடம் அமைச்சர் மகேஸ் வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மகேஸ் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து ஜல்லிக்கட்டை பார்த்தது மகிழ்ச்சி. அடுத்த ஆண்டு பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ரூ.3 கோடியில் இந்த அமைதானம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.