புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் கோவில் திருவிழாவை
யொட்டி ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடந்தது.
இதில் பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல்நிலையத்தில்
பணிபுரியும் நவநீத கிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் பலத்தகாயமுற்றார்.
அவரை உடனடியாக காரைக்குடிக்கு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.அங்குசிகிச்சைபலனின்றி இறந்துபோனார். புதுப்பட்டி யைச்சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவரும் மாடு முட்டியதில் இறந்துபோனார் .இந்தஜல்லிக்கட்டு நிகழ்வில் 20க்குமேற்பட்டோர் காயமுற்றனர்.
கே.புதுப்பட்டி காவல்துறையினர்
வழக்கு பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.