திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டு கமிட்டியைச் சேர்ந்த சம்பத் (29), பார்வையாளர்களான வேங்கூரை சேர்ந்த நிவாஸ் குமார் (28), களமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25), கள்ளிக்குடியைச் சேர்ந்த கோபி ( 27 ), சன்னாச்சி பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (59), வீரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (20), கோவிலடியைச் சேர்ந்த தனுஷ் (19), கீரனூரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (22), கண்ணாங்குடியைச் சேர்ந்த பழனி (14) மாட்டின் உரிமையாளர்களான சப்பானிப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (24), எட்டுகல் பட்டியைச் சேர்ந்த செல்லமுத்து (35) ஆகியோர் மாடுகள் முட்டி காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அரவிந்த் என்ற இளைஞரின் மார்பு பகுதியில் காளை பலமாக குத்தியதால் சிகிச்சைக்கு பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Tags:ஜல்லிக்கட்டு