மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது. மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் 28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்கிற பெருமையை பெற்று காரை பரிசாக பெற்றார். ஜல்லிக்கட்டு களைகளை வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் விதமாக தனக்கு தரப்பட்ட அண்டா, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எந்தக் காளையை தான் அடக்கினோரோ அந்த காளையின் உரிமையாளருக்கே வழங்கினார். அவனியாபுரம் கார்த்தி 17 காளைகள் பிடித்து 2வது இடம் பிடித்து மோட்டார் சைக்கிளை பரிசாக பெற்றார். விளாங்குடி பாலாஜி 13 காளைகள் பிடித்து 3வது இடத்தை பிடித்தார் அவருக்கு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார்.