ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்…….ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன. கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து…….ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்….. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து, ஐல்லிக்கட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
