இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால், ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ஸ்டார்க் வீசிய பந்தில் அவர் எல்பி டபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அவருக்கு பதில் கில் பேட் செய்ய வந்தார். அவர் ராகுலுடன் சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தார். 11 ஓவர் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர், ஜூரேல் படிக்கல் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
பேட்டிங் எடுத்தது குறித்து கேப்டன் ரோகித் கூறியதாவது: நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம்.பிட்ச் தற்போது காய்ந்து இருக்கிறது. போதுமான புற்கள் இருக்கிறது. அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியை கொடுக்கலாம். ஆனால் போட்டி செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். இது ஒரு நீண்ட போட்டி. நான் மிடில் ஆர்டரில் ஆடுகிறேன். அது வித்தியாசமாக இருந்தாலும் அந்த சவாலுக்கும் தயாராக உள்ளேன.
இவ்வாறு அவர் கூறினார்.