நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் ஆர்வத்துடன் அதிகாலை 5 மணிக்கே தியேட்டர்களுக்கு வந்து விட்டனர். படம் முடிந்து வெளியே வந்த ரஜினி ரசிர்கள் படம் ரொம்ப சூப்பர் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பெங்களூரு விவேக் நகர் பகுதியில் உள்ள தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதுபோல பல இடங்களில் தியேட்டர்களில் தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் ‘ஜெயிலர்’ முதல் காட்சி திரையிடப்பட்டது.
