தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அதேபோன்று அனைத்து இடங்களிலும்
ரஜினின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ரஜினி பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி டிக்கெட் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசுகள் வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடினர். அதேபோன்று மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடி ரஜினிகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதனால் திரையரங்கம் முழுவதும் விழா கோலம் கண்டது.