நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டு பேசியுள்ளார்.
கடைசியாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு படம் ரிலீசாக நிறைய நாட்கள் ஆகிவிட்டது. சரியான கதை கிடைக்காததால் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. இயக்குனரும், கதையும் ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம். முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்தி சுப்புராஜ் உள்ளிட்டோர் என் கெரியரை உயர்த்தி இயக்குனர்கள். தற்போது இயக்குனர் நெல்சனும் அந்த வரிசையில் உள்ளார்.
நெல்சன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. ‘பீஸ்ட்’ ஷூட்டிங் முடிந்து 10 நாட்கள் கழித்து விரிவான கதை சொல்வதாக கூறியிருந்தார். அதன்படியே 10 நாள் கழித்து முழு கதையையும் சொன்னார் நெல்சன். இந்த படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல. ஆனால் அதுக்குலாம் மேல இருக்கும். ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.
‘பீஸ்ட்’ படம் சரியாக ஓடவில்லை என்றாலும் வசூலில் நல்ல கலெக்ஷனை ஈட்டியது. அதனால் இயக்குனரை மாற்ற சொல்லி விநியோகிஸ்தர்கள் கேட்டனர். ஆனால் நெல்சன் தான் இயக்குனர் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று