Skip to content
Home » திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 15ந் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயபாஸ்கர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம்
அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.