திருச்சி எடமலைப்பட்டிபுதுார் பகுதியில் வாக்கிங் சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி தாலி செயினை பறித்து சென்ற ரெத்தினவேல்(20) என்பவர் ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதி மொழி பிராமண பத்திரத்தை எடமலைப்பட்டிபுதுார் காவல் நிலையத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பிராமண பத்திர உறுதிமொழியை மீறும் வகையில் அவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ரத்தினவேல் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.