தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் பொங்கல் வைப்பார்கள். இதற்கு வெல்லம் பயன்படுத்துவார்கள். எனவே பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி கடந்த ஒருமாதமாக மும்முரமாக நடந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தில் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரையும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்குவது பெரம்பலூர் மாவட்டம் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 18000 ஏக்கர் முதல் 23 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
காடூர் கிராமத்தில் ஆண்டுக்கு சுமார் 600 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டு வருவதால் ஆலைகளை நம்பி இருக்காமல் இங்கு மட்டும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காடூர் கிராமத்தில் மட்டும் பத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் கரும்புக்கான கிரஷர் இயந்திரத்தால் கரும்புச் சாற்றை பிழிந்து எடுத்து பெரிய கொப்பரைகளில் பா காகக் காய்ச்சி பதமான தருணத்தில் அச்சு வெல்லமாகவும் கைகளில் உருட்டி பிடித்து உருண்டை வெல்லமாகவும் நாட்டுச்சக்கரையாகவும் 3 ரகங்களில் தயாரிக்கின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தலா 30 கிலோ எடை கொண்ட சிப்பமாக பேக்கிங் செய்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிகல்பாளையம் சந்தைக்கும் பழனி அருகே நெய்க்காரப்பட்டி சந்தைக்கும் ஏற்றுமதி செய்கின்றனர் இவற்றைத் தவிர பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள பிரபலமான மளிகை கடைகளுக்கும் சில்லறையாக விற்பனை செய்கின்றனர் நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் ஜனவரி வரை பிப்ரவரி மார்ச் ஏப்ரல் என மே மாதம் வரை வெல்லம் தயாரிக்கும் பணிக்கான சீசன் ஆக இருந்தாலும் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரையிலான தயாரிப்பு பணிகள் பொங்கல் பண்டிகையை கணக்கிட்டு அதிக அளவு நடக்கிறது டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை காடூரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மூலம் 25,000 சிப்பம் வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
காடூர் கிராமத்தில் வெள்ளம் தயாரிக்கும் பெரியசாமி கூறுகையில் ஒரு சிப்பம் உருண்டை வெள்ளம் 1070 க்கும் அச்சு வெல்லும் ஒரு சிப்பம் ஆயிரம் முதல் 1200 வரை விலை கிடைக்கிறது சராசரியாக 1150 என்பது சரியாக இருக்கும் கடந்த 2012 ஆண்டு ஒரு சிப்பம் 950 முதல் 1100 வரைக்கும் விலை போனது இப்போது இரண்டு மடங்கு செலவு செய்து தயாரிக்கும் வெல்லமும் அதே விலைக்கு தான் போகிறது இன்றைய செலவுகளுக்கு ஒரு சிப்பம் 1500க்கு மேல் விலை கிடைத்தால் தான் நஷ்டம் இல்லாமல் இருக்கும் மேலும் பொங்கலுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் ஒரு சிப்பம் 800க்கும் குறைவாக விற்கும்போதுஉழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம், அதனை உற்பத்தி செய்கிறவர்களுக்கு மட்டும் இனிப்பை தருவதில்லை; என்றார்.