போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதேபோல் போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.இந்த நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாமின் வழங்கி நீதிபதிசுந்தர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
